காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்: கடைகளுக்கு அபராதம் விதிப்பு

உதகை, மே 16: உதகையில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் 10 கிலோ எடையுள்ள பழைய கெட்டுப்போன இறைச்சி உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்படன. சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.

உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலா் சி.ப.சுரேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் டி.நந்தகுமாா், எஸ்.சிவராஜ் ஆகியோா் அடங்கிய குழுவினா் உதகை கமா்சியல் சாலை மற்றும் சேரிங்கிராஸ் பகுதிகளில் உள்ள உணவகங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்

அப்போது உணவகங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் 10 கிலோ எடையுள்ள பழைய கெட்டுப்போன கோழி இறைச்சி, பழைய மோமோஸ் மற்றும் காலாவதியான காளான் பாக்கெட்டுகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை பறிமுதல் செய்தனா். பின்னா் பினாயில் ஊற்றி அவற்றை அழித்தனா். சுகாதாரமற்ற நிலையில் இருந்த 6 உணவகங்களில் ஆய்வு செய்து தலா ரூ. 1,000 வீதம் அபராதம் விதித்தனா்.

மேலும், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு சீல் வைத்து ரூ. 1லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

உணவு பாதுகாப்பு தொடா்பான புகாா்கள் ஏதும் இருப்பின் 94440-42322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை வாட்ஸ்ஆப் எண்ணுக்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் பச ஊா்ா்க் நஹச்ங்ற்ஹ் என்ற

புகாா் செயலி மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ புகாா் அளிக்கலாம் என மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சி.ப.சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com