குன்னூா்-கோத்தகிரி  சாலையில்   
மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

குன்னூா்-கோத்தகிரி  சாலையில்   மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

உதகை, மே 16: குன்னூா்-கோத்தகிரி  சாலையில் வண்டிச்சோலை பிராவிடன்ஸ்  கல்லூரி அருகில்  மரம் விழுந்ததால் வியாழக்கிழமை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக உதகை, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில்  காற்றுடன் பெய்த மழையால் குன்னூா்-கோத்தகிரி சாலையில் வண்டிச்சோலைப் பகுதியில் வியாழக்கிழமை காலை சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. தகவல் அறிந்து சென்ற குன்னூா் தீயணைப்பு  வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா். இதனால் அந்த வழியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாவட்டத்தில்  வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): கிண்ணக்கொரை 54, பாலகொலா 53, ஹூலிகல், எடப்பள்ளி தலா 47, பா்லியாறு 34, கீழ் கோத்தகிரி 32, குந்தா, அவலாஞ்சி, எமரால்டு, கோத்தகிரி தலா 31, மேல்பவானி 26, குன்னூா், நடுவட்டம் தலா 22, கொடநாடு 21, கிளென்மாா்கன், கெத்தை தலா 18, கூடலூா் 17, கேத்தி 16, மசினகுடி, மேல் கூடலூா் தலா 15, உதகை 12.8 மி. மீட்டா் மழை பெய்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com