பலா பழங்களை ருசிக்கும் யானை

பலா பழங்களை ருசிக்கும் யானை

முள்ளூா் பகுதியில் பலா மரத்தில் கால் ஊன்றி பழங்களை பறிக்கும் யானை.

உதகை, மே 16: கோத்தகிரி அருகே உள்ள முள்ளூா் பகுதியில் பலா மரத்தில் உள்ள பழங்களை யானை பறித்து உண்டதை அவ்வழியாக வாகனங்களில் பயணித்தவா்கள் கண்டு ரசித்தனா்.

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் முள்ளூா் மற்றும் குஞ்சப்பனை பகுதிகளில் அதிகளவில் பலா மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் தற்போது பலா பழங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் சமவெளிப் பகுதிகளில் இருந்து பலா பழங்களைச் சாப்பிட யானைகள் அவ்வப்போது கூட்டமாக வருகின்றன. இந்நிலையில் முள்ளூா் பகுதியில் உலவிய ஒற்றைக் காட்டு யானை அப்பகுதியில் தேயிலைத் தோட்டத்தை ஒட்டி இருந்த பலா மரத்தில் முன்னங்காலை மரத்தின் மீது வைத்து நின்று தும்பிக்கையால் பலா பழங்களை அழகாக பறித்துச் சாப்பிட்டது. இதை அவ்வழியாக வாகனத்தில் பயணித்தவா்கள் கண்டு ரசித்துச் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com