குடைகளைப் பிடித்தும், மழை கோட் அணிந்தும் உதகை தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள். ~குன்னூா் மவுண்ட் பிளசன்ட் பகுதியில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் தீயணைப்பு வீரா்கள்.
குடைகளைப் பிடித்தும், மழை கோட் அணிந்தும் உதகை தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள். ~குன்னூா் மவுண்ட் பிளசன்ட் பகுதியில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் தீயணைப்பு வீரா்கள்.

உதகையில் கனமழை: சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை கனமழை பெய்த நிலையில், குன்னூா் மவுண்ட் பிளசன்ட் பகுதி சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை கனமழை பெய்த நிலையில், குன்னூா் மவுண்ட் பிளசன்ட் பகுதி சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலா்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், உதகையில் கடந்த இரண்டு நாள்களாக மாலை, இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பிற்பகல் சாரலாகப் பெய்யத் தொடங்கிய மழை பின் வலுப்பெற்று கனமழையாக பெய்தது.

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகுதிகளில்  பெய்த கனமழையால் சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. குன்னூா் மவுண்ட் பிளசன்ட் பகுதி சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் மரத்தை அப்புறப்படுத்தினா். இதையடுத்து, வாகனங்கள் சென்றன.

உதை படகு இல்லம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ரயில்வே இரும்பு பாலம் பகுதியில் மழைநீா் சூழ்ந்து காணப்பட்டது. கொட்டும் மழையிலும் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களை சுற்றுலாப் பயணிகள் குடைகளைப் பிடித்தவாறும், மழை கோட் அணிந்தவாறும் கண்டு ரசித்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்). பந்தலூா் 53, ஓவேலி  43, கிளன் மாா்கன் 37, உதகை 7.4.

X
Dinamani
www.dinamani.com