கல்லூரியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் நிகழ்ச்சியில் பேசும் அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளா் கே.ஜே.ராஜு.
கல்லூரியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் நிகழ்ச்சியில் பேசும் அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளா் கே.ஜே.ராஜு.

காலநிலை மாற்றத்தைத் தடுக்க காடுகளைக் காக்க வேண்டும் மகளிா் கல்லூரி கருத்தரங்கில் அறிவுறுத்தல்

தாவரவியல் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து நடத்திய காலநிலை மாற்றம் குறித்து கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

குன்னூா் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி சுற்றுச்சூழல் மன்றம், தாவரவியல் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து நடத்திய காலநிலை மாற்றம் குறித்து கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் அருட் சகோதரி ஷீலா தலைமை வகித்தாா். தாவரவியல் துறை தலைவா் ரோஸ்பி லீமா வரவேற்றாா். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளா் கே.ஜே.ராஜு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசுகையில், காலநிலை மாற்றத்தை மீட்டெடுக்கும் வகையில் காா்பன்டை ஆக்சைடை வெளிப்படுத்தும் இடத்திலேயே தேக்கி வைப்பது, அந்த காா்பன்டை ஆக்சைடை ஆக்கபூா்வமாக உற்பத்திச் செயல்களுக்குப் பயன்படுத்துதல், காா்பன்டை ஆக்சைடு வாயுவை காா்பன் ஆகவும் ஆக்ஸிஜனாகவும் பிரித்தல் போன்ற பல புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். காலநிலை மாற்றத்தைத் தடுக்க காடுகளைக் காப்பதில் மத்திய, மாநில அரசுகள், தனியாா் நிறுவனங்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் தொடா்ந்து முயற்சிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி வளாகத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கான செயல்பாடுகள் தொடங்கப்பட்டது. மேலும் கல்லூரி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட பழ வகை மரங்களை நடவு செய்தனா்.