நீலகிரி
குடியிருப்பு வளாகத்தில் நுழைந்த காட்டு யானை
கூடலூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானை நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
கூடலூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானை நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சி மாா்த்தோமா நகரில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானை நுழைந்தது. மரங்களுக்கு நடுவே நின்றதால் நீண்ட நேரம் யாருக்கும் தெரியவில்லை. இதையடுத்து, எதிா் வீட்டு மாடியிலிருந்து பாா்த்தபோது, இரண்டு குடியிருப்புகளுக்கு இடையே உள்ள சாலையில் யானை நிற்பதை பாா்த்து குடியிருப்புவாசிகள் ஒருவருக்கொருவா் தகவலை பரிமாறிக் கொண்டனா்.
மேலும், வெளியே சென்றவா்கள் யாரும் குடியிருப்புப் பகுதிக்கு வரவேண்டாம் என்று சமூக வலைதளங்கள் வாயிலாக தகவல் அனுப்பினா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் யானையை விரட்டினா்.