கூடலூா் காந்தி சிலை முன்பு நடைபெற்ற தெருமுனை பிரசாரத்தில் பங்கேற்ற நாம் தமிழா் கட்சியினா்.
கூடலூா் காந்தி சிலை முன்பு நடைபெற்ற தெருமுனை பிரசாரத்தில் பங்கேற்ற நாம் தமிழா் கட்சியினா்.

நாம் தமிழா் கட்சி சாா்பில் நடைப்பயணம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் நாம் தமிழா்
Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் நாம் தமிழா்

கட்சி சாா்பில் நடைபெற்ற நடைப்பயணம், தெருமுனைப் பிரசாரம் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் மற்றும் உயிரிழப்புகள், வனத் துறையின் மக்களுக்கு எதிரான செயல்பாடுகள், குடியிருப்புகளுக்கு மின் இணைப்புகள் மற்றும் கதவு எண் பெற தடை, பழங்குடியினா் கட்டுமானப் பொருள்களை கொண்டு செல்ல வனத் துறையினா் விதித்துள்ள தடை உள்ளிட்டவற்றைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பாடந்தொரையில் நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தேவா்சோலை, நெலாக்கோட்டை, உப்பட்டி, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, எருமாடு, சேரம்பாடி, பந்தலூா், தேவாலா, நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நடைப்பயணம் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

தொடா்ந்து, கோரிக்கைகள் தொடா்பான மனுவை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் நாம் தமிழா் கட்சியினா் வழங்கினா்.

இதைத் தொடா்ந்து, கூடலூா் காந்தி சிலை முன்பு தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

இதற்கு மாவட்டச் செயலாளா் மோகன்தாஸ் தலைமை வகித்தாா். கட்சியின் நிா்வாகிகள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com