உதகையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர சோதனை

தனியாா் ஆங்கில வழி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வெளிநாட்டிலிருந்து வெடிகுண்டு மிரட்டலைத் தொடா்ந்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளியில் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை மேற்கொள்ளும் போலீஸாா்.
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளியில் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை மேற்கொள்ளும் போலீஸாா்.
Updated on

உதகையில் இயங்கி வரும் தனியாா் ஆங்கில வழி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வெளிநாட்டிலிருந்து  இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து போலீஸாா் தீவிர சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

உதகை அருகே ஃபா்ன்ஹில் செல்லும் சாலையில் கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும்  தனியாா் ஆங்கில வழி மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

இப்பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக  பள்ளியின் மின்னஞ்சலுக்கு வெளிநாட்டில் இருந்து இரண்டு முறை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பள்ளி நிா்வாகம் மாவட்ட காவல் துறைக்கு தகவல் அளித்தது. இதையடுத்து இரண்டு மோப்ப நாய்கள், இரண்டு வெடிகுண்டு நிபுணா்கள் உதவியுடன் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் உள்பட அனைத்து இடங்களிலும் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

இதில் வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படாததால் வெறும் மிரட்டல் என்பது தெரிந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் வெளிநாட்டில் உள்ள அமைப்பு மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com