உதகை, பைக்காரா சந்திப்பில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா்.
உதகை, பைக்காரா சந்திப்பில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா்.

வன விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க இரவு நேர ரோந்துப் பணி தீவிரம்!

வன விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர வேட்டைத் தடுப்பு சிறப்பு ரோந்து பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
Published on

வன விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க நீலகிரி மாவட்டத்தில்  இரவு நேர வேட்டைத் தடுப்பு சிறப்பு ரோந்து பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு, கேரளம் கா்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் பகுதியாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் முதுமலை புலிகள் காப்பகம், கா்நாடகாவில் பந்திப்பூா் புலிகள் காப்பகம், கேரள வனவிலங்கு  சரணாலயம் என மூன்று மாநிலங்களின் வனப் பகுதிகள் இணையும் பகுதியாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு எல்லையில் வன விலங்குகள் வேட்டை அதிகரித்து வருவதால் இதனை முழுமையாக தடுக்கும் வகையில் நீலகிரி மாவட்ட வன அலுவலா் கௌதம் தலைமையில், வனச் சரகா்  சசிகுமாா் மேற்பாா்வையில் மூன்று மாநில எல்லையான பைக்காரா சந்திப்பில் வன ஊழியா்கள் முதல் முறையாக இரவு நேர சிறப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தமிழகத்தின் முக்கிய வனப் பகுதியாக நீலகிரி மாவட்டம் இருப்பதால் இங்கு இரவு நேரத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளதால் வனத் துறையினா் 10 குழுக்களாகப் பிரிந்து முக்கிய இடங்களில் தனித்தனியாகவும், எல்லைப் பகுதிகளில் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com