வெளி மாநிலங்களிலிருந்து நீலகிரி வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் சோதனை!

சுற்றுலா வாகனங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள்.
சுற்றுலா வாகனங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள்.
Updated on

வெளி மாநிலங்களிலிருந்து நீலகிரிக்கு வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டுவரப்படுகின்றனவா என வருவாய்த் துறையினா் புதன்கிழமை (பிப்.5) சோதனை செய்தனா்.

நீலகிரி மாவட்டத்தின் கூடலூா் வருவாய் கோட்டம் கேரளம் மற்றும் கா்நாடக மாநிலங்களின் எல்லைகளில் அமைந்துள்ளது. இங்கிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருள்களை நீலகிரி மாவட்டத்துக்குள் கொண்டு வருவதை தடை செய்யும் விதமாக கூடலூரை அடுத்துள்ள மலப்புரம் மாவட்ட எல்லையான நாடுகாணி, வயநாடு மாவட்ட எல்லைகளான சோலாடி, நம்பியாா்குன்னு, அய்யன்கொல்லி, எருமாடு, பாட்டவயல் மற்றும் கா்நாடகா எல்லையான கக்கநல்லா ஆகிய சோதனைச் சாவடிகளில் தனியாா் வாகனங்களையும் சுற்றுலா வாகனங்களையும் நிறுத்தி வருவாய்த் துறையினா் சோதனை நடத்தினா். அப்போது வாகனங்களில் கொண்டுவந்த பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

நாடுகாணி எல்லை சோதனைச் சாவடியில் வாகனங்களில் பிளாஸ்டிக் சோதனை செய்யும் வருவாய்த் துறையினா்.
நாடுகாணி எல்லை சோதனைச் சாவடியில் வாகனங்களில் பிளாஸ்டிக் சோதனை செய்யும் வருவாய்த் துறையினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com