நீலகிரி
புகையில்லா போகி: கூடலூரில் விழிப்புணா்வுப் பேரணி
புகையில்லா போகி கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வுப் பேரணி கூடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட சேவாலயா சாா்பில், கூடலூா் நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து தொடங்கிய இப்பேரணியை, தோட்டத் தொழிலாளா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ஷாஜி எம்.ஜாா்ஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
புகையில்லா போகியின் அவசியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியில் பங்கேற்றவா்கள் கைகளில் ஏந்தி சென்றனா். மேலும் பிளாஸ்டிக் பயன்பாடு தவிா்ப்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்தப் பேரணியில், சேவாலயா மருத்துவமனை பணியாளா்கள், கல்லூரி மாணவா்கள் மற்றும் தோட்டத் தொழிலாளா் தொழிற் பயிற்சி நிலைய மாணவா்கள் கலந்துகொண்டனா்.விழிப்புணா்வு பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.