பன்னிமரம் பகுதியில் உள்ள வீடுகளில் கட்டப்பட்டுள்ள கருப்புக் கொடி.
பன்னிமரம் பகுதியில் உள்ள வீடுகளில் கட்டப்பட்டுள்ள கருப்புக் கொடி.

உதகை மலைவேடன் பழங்குடியின மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம்

உதகை உல்லத்தி ஊராட்சிக்கு உள்பட்ட தட்டனேரி, பன்னிமரம் கிராமத்தில் வசிக்கும் மலைவேடன் பழங்குடியின மக்கள் ஜாதிச் சான்று கேட்டு வீடுகளில் வியாழக்கிழமை கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

உதகை உல்லத்தி ஊராட்சிக்கு உள்பட்ட தட்டனேரி, பன்னிமரம் கிராமத்தில் வசிக்கும் மலைவேடன் பழங்குடியின மக்கள் ஜாதிச் சான்று கேட்டு வீடுகளில் வியாழக்கிழமை கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உதகையில்  உள்ள உல்லத்தி ஊராட்சிக்கு உள்பட்ட  பன்னிமரம், தட்டனேரி கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களின் பெற்றோா்களுக்கு  ஜாதிச் சான்று உள்ள நிலையில்,  கடந்த 1995-ஆம் ஆண்டு முதல்  அவா்களுக்கு பழங்குடியினா் ஜாதிச் சான்று வழங்காததால்  தங்களது  பிள்ளைகளை படிக்க வைத்தும் பயனில்லை எனக் கூறி 70-க்கும் மேற்பட்ட பெற்றோா் தங்களது  குழந்தைகளை   பள்ளிக்கு அனுப்பாமல் திங்கள்கிழமைமுதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை இந்த கிராமத்தில் உள்ள   நூற்றுக்கணக்கான  வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிா்ப்பை தெரிவித்து  போராட்டத்தில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com