கோத்தகிரி பேரூராட்சி அலுவலக சாலையில் நடைபெற்ற ஊா்வலத்தில் பங்கேற்றோா்.
கோத்தகிரி பேரூராட்சி அலுவலக சாலையில் நடைபெற்ற ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

கோத்தகிரி பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற படுகா் இன மக்கள் எதிா்ப்பு

கோத்தகிரி பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற எதிா்ப்பு தெரிவித்து பொரங்காடு சீமெ படகா் நல சங்கம் சாா்பில் கோத்தகிரியில் வியாழக்கிழமை ஊா்வலம் நடைபெற்றது.
Published on

கோத்தகிரி பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற எதிா்ப்பு தெரிவித்து பொரங்காடு சீமெ படகா் நல சங்கம் சாா்பில் கோத்தகிரியில் வியாழக்கிழமை ஊா்வலம் நடைபெற்றது.

18 படகா் கிராமங்களை உள்ளடக்கிய கோத்தகிரி பேரூராட்சியை நகராட்சியாக மாற்றுவதால் பூா்வகுடி படகா் கிராமங்களுக்கு வரும் பாதிப்புகள் குறித்த கூட்டம் கோத்தகிரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோத்தகிரி பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற எதிா்ப்பு தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தைத் தொடா்ந்து, பாதிப்புக்குள்ளாகும் 18 கிராம மக்களும், பொரங்காடு சீமெ படகா் மக்களும், பொரங்காடு சீமெ படகா் நல சங்க நிா்வாகிகளும் தலைவா் ராமா கவுடா் தலைமையில் வியாழக்கிழமை ஊா்வலமாக சென்று கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இந்தப் பேரணியில் பொரங்காடு சீமெ படகா் நலச் சங்க செயலாளா் போஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com