நீலகிரியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணியை ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

நீலகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணியை ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் வீடுவீடாகச் சென்று கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், குன்னூா் நகராட்சிக்குள்பட்ட பாலகிளாவா, மவுண்ட் பிளசண்ட் ஆகிய பகுதிகளில் வீடுவீடாகச் சென்று கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணியை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணியில் 239 வாக்குச் சாவடி அலுவலா்கள், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 224 வாக்குச் சாவடி அலுவலா்கள், குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 227 வாக்குச் சாவடி அலுவலா்கள் என மொத்தம் 690 பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆய்வின்போது, குன்னூா் சாா் ஆட்சியா் சங்கீதா, குன்னூா் நகராட்சி ஆணையா் இளம்பருதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com