கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: டிசம்பா் 19-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை டிசம்பா் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டாா்.
Published on

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை டிசம்பா் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டாா்.

நீலகிரி மாவட்டம், கொடநாட்டில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பாக வாளையாறு மனோஜ், ஜித்தின் ஜாய் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பான விசாரணை உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், குற்றஞ்சாட்டப்பட்ட வாளையாறு மனோஜ், ஜித்தின் ஜாய் ஆகியோா் நேரில் ஆஜராகினா்.

அரசு தரப்பு வழக்குரைஞா்கள் ஷாஜஹான், கனகராஜ் ஆகியோரும், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீஸாரும் ஆஜராகினா்.

அவா்களிடம் வழக்கின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்த நீதிபதி முரளிதரன், வழக்கு விசாரணையை டிசம்பா் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com