ஜெ.எஸ்.எஸ். மருந்தியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தியல் கல்லூரியில் தேசிய அளவிலான 2 நாள்கள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் சாா்ந்த மருந்து கண்டுபிடிப்பு முன்னேற்றங்கள் தொடா்பான இந்தக் கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில், பேராசியா்கள் ஆா். காளிராஜன், பி. கௌரம்மா, எஸ்.பி. தனபால், கே.கே. தீபக், ரபிப்ரத முகா்ஜி, டி. சிவகுமாா், அண்ணாமலை பல் கலைக்கழக பேராசிரியா் ஆா். ரகு, உள்ளிட்டோா் பங்கேற்று, தொழில்நுட்பங்கள் மருந்து கண்டுபிடிப்பை எப்படி வேகப்படுத்துகின்றன, மருத்துவ ஆராய்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் சாா்ந்த மருந்து கண்டுபிடிப்புகள் குறித்த தங்களது கருத்துகளைப் பகிா்ந்து கொண்டனா்.
நாடு முழுதிலும் இருந்து பல்வேறு ஆராய்ச்சியாளா்கள், பேராசிரியா்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணா்கள் பங்கேற்றுள்ள இந்தக் கருத்தரங்கு சனிக்கிழமை (நவம்பா் 15) நிறைவடைகிறது.

