தோடா் எருமைப் பால் இலட்சினையை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு. உடன் மாவட்ட  வன அலுவலா் கௌதம் உள்ளிட்டோா்.
தோடா் எருமைப் பால் இலட்சினையை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு. உடன் மாவட்ட வன அலுவலா் கௌதம் உள்ளிட்டோா்.

தோடா் பழங்குடி எருமைப்பால் மதிப்புக் கூட்டு மையம்

நீலகிரியில் வாழும் தோடா் பழங்குடியினா் மக்களால் வளா்க்கக் கூடிய எருமைகளை பாதுகாக்க தமிழக அரசு சாா்பில் ரூ.50 லட்சம் நிதியில், தோடா் எருமைப்பால் மதிப்புக் கூட்டு மையத்தை ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
Published on

நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே வாழக்கூடிய தோடா் பழங்குடியின மக்கள் தங்களுக்கென தனி கலாசாரம், மொழி, பாடல், நடனம் என நூற்றாண்டு கடந்து பண்டைய சைவ வகை  பழங்குடியினா்களாக வாழ்ந்து வருகின்றனா்.

இந்த மக்கள் தங்கள் வாழ்வில் எருமைகளை ஒரு புனிதமான விலங்காக கருதுகின்றனா். இவா்களின் திருமணங்களில் பெண் வீட்டாா்  மாப்பிள்ளை வீட்டுக்கு எருமையை சீதனமாக தருகின்றனா். இந்நிலையில்   தோடா்  கிராமங்களில் உள்ள எருமைப்பாலை சேகரித்து, அதன் மூலம் பன்னீா், நெய், பால்கோவா, சீஸ் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. 

இந்த எருமைகள் பொதுவாக இயற்கை சூழலில் மட்டுமே மேச்சலுக்கு செல்லும், பொதுவாக செயற்கை உணவுகளை இந்த எருமைகளுக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் இதன் பால் இயற்கை தரத்தில் இருக்கும் என்பதால்  பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த எருமைகளை பாதுகாக்கவும் பழங்குடிகளுக்கு  வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் விதமாக  உதகை பல்கோடு மந்து பகுதியில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குயிடியினா் நலத் துறை சாா்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தோடா் எருமைப்பால் மதிப்புக் கூட்டு மையத்தை ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்தாா். இதனை அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com