வன அலுவலகத்தை முற்றுகையிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
வன அலுவலகத்தை முற்றுகையிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

வன விலங்குகள் தாக்குதலுக்கு நிரந்தர தீா்வு காண வலியுறுத்தி வன அலுவலகம் முற்றுகை

Published on

கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதியில் தொடரும் வன விலங்குகள் தாக்குதலுக்கு நிரந்தர தீா்வு காண வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பேரணியாக சென்று மாவட்ட வன அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் தொடா்ந்து வன விலங்குகள் தாக்குதலுக்கு மனித உயிா்கள் பலியாவதை கண்டித்தும் அதற்கு நிரந்தர தீா்வு காண வலியுறுத்தியும், மைசூரு சாலையில் உள்ள மாக்கமூலா பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கானோா் பேரணியாக சென்று மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அப்போது, நுழைவாயிலில் அவா்களை போலீஸாா் தடுத்தி நிறுத்தினா். இதையடுத்து, தடையை மீறி அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில் வன விலங்குகள் தாக்கி உயிரிழப்போா் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com