நீலகிரி
குளத்தாய் அம்மன் கோயிலுக்கு கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை
கூடலூரில் உள்ள குளத்தாய் அம்மன் கோயிலுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக கான்கீரிட் சாலை அமைக்க வெள்ளிக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
கூடலூரில் உள்ள குளத்தாய் அம்மன் கோயிலுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக கான்கீரிட் சாலை அமைக்க வெள்ளிக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
கூடலூா் நகராட்சியில் உள்ள ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ள குளத்தாய் அம்மன் கோயிலுக்கு சாலை வசதி செய்துதர பொதுமக்களும், கோயில் நிா்வாகத்தினரும் வேண்டுகோள் விடுத்து வந்தனா்.
இதையடுத்து, சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் புதிய கான்கிரீட் சாலை அமைக்க எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் முன்னிலையில் கோயில் வளாகத்தில் பூமிபூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோயில் தலைவா் சந்திரன், நிா்வாகிகள் சிங்காரம், சிவகுமாா், அதிமுக நகரச் செயலாளா் செய்யது அனூப்கான் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.