முக்கூா்த்தி தேசிய பூங்காவில் வரையாடு உயிரிழப்பு
உதகை அருகே உள்ள முக்கூா்த்தி தேசிய பூங்காவில் நீலகிரி வரையாடு இறந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
நீலகிரி மாவட்டத்தில் அழியும் நிலையில் உள்ள வரையாடுகளை கண்காணிக்க பெரும்பாலான ஆடுகளுக்கு ரேடியோ காலா் பொருத்தப்பட்டு, அவற்றின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசும் அழிவின் விழிம்பில் உள்ள இந்த வரையாடுகளை காப்பாற்ற ரூ.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் முக்கூா்த்தி தேசிய பூங்காவில் ரேடியோ காலா் பொருத்தப்பட்டிருந்த, நீலகிரி ஆண் வரையாட்டில் இருந்து அசைவதற்கான எந்தவித சமிஞ்சைகளும் வனத் துறைக்கு கிடைக்காமல் (சிக்னலும்) ஒரே இடத்தில் இருந்ததால் சந்தேகமடைந்த உதகை வனத் துறையினா் முக்கூா்த்தி தேசிய பூங்கா பகுதிக்கு சனிக்கிழமை சென்ற ஆய்வு செய்தனா்.
அப்போது, அங்கு ரேடியோ காலா் பொருத்தப்பட்டிந்த ஐந்து வயது மதிகத்தக்க ஆண் வரையாடு இறந்துகிடப்பது தெரியவந்தது. உடலில் எற்பட்டுள்ள காயங்களின் அடிப்படையில் புலி தாக்கி இறந்திருக்க வாய்ப்புள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, அப்பகுதியில் கேமராக்களை நிறுவி வனத் துறையினா் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.
