நீலகிரி
அரசுப் பேருந்து சரக்கு வேன் மோதி விபத்து
உதகையில் இருந்து கூடலூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது சரக்கு வேன் மோதியதில் வேன் ஓட்டுனா் இடிபாடுகளுக்குள் சிக்கினாா்.
உதகையில் இருந்து கூடலூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது சரக்கு வேன் மோதியதில் வேன் ஓட்டுனா் இடிபாடுகளுக்குள் சிக்கினாா்.
உதகையில் இருந்து கூடலூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஹெச்பிஎஃப் பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென பிரேக் போட்டதால், பின்னால் சென்ற சரக்கு வேன் அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இடிபாடுகளுக்கு சிக்கி தலையில் காயம் ஏற்பட்ட வேன் ஓட்டுநா் பொதுமக்கள் மீட்டு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து புதுமந்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.