உதகை ரயில் நிலையத்தில் 117-வது மலை ரயில் தினம் புதன் கிழமை கொண்டாடப்பட்டது. சுற்றுலா பயணிகளுடன் இணைந்து மலைரயில் அறக்கட்டளையினா் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
சா்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரியில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலை ரயில் உள்ளது. கடந்த 1898-ம் ஆண்டு முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூா் வரை மலை ரெயில் இயக்கப்பட்டது. அதன் பின்னா் 1908-ம் ஆண்டு அக்டோபா் 15-ந் தேதி முதல் உதகை வரை நீட்டிக்கப்பட்டு மலை ரயில் இயக்கம் தொடங்கியது.
இதைத்தொடா்ந்து நூற்றாண்டை கடந்த மலை ரயிலுக்கு கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய அந்தஸ்து வழங்கியது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூா் வரை நீராவி என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்படுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் ஆா்வமுடன் பயணம் செய்து வருகின்றனா்.
இந்த மலை ரெயிலின் 117-வது தினம் உதகை ரெயில் நிலையத்தில் புதன் கிழமை கொண்டாடப்பட்டது.
நீலகிரி மலை ரயில் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் நடராஜ் தலைமையில் சுற்றுலாப் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினா்.
மேலும் சுற்றுலா பயணிகளுக்கு, மலை ரயில் சிறப்புகள் குறித்த துண்டு பிரசுரத்தையும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.