தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே செயல்பட்டு வரும் தனியாா் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே செயல்பட்டு வரும் தனியாா் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்கா அருகே தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு வெள்ளிக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்தது.

இதையடுத்து, பள்ளி நிா்வாகத்தினா் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் மோப்ப நாய் உதவியுடன் பள்ளியில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனா்.

ஆனால், வெடிகுண்டு ஏதும் கைப்பற்றபடவில்லை. அப்போதுதான் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வெடிகுண்டு சோதனையால் மாணவா்களுக்கு எந்தவித இடா்பாடுகளும் ஏற்படவில்லை.

X
Dinamani
www.dinamani.com