இந்திரா நகா் பகுதியில் மண்சரிவை தடுக்க தற்காலிக கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட தமிழ்நாடு பேரிடா் மீட்புக் குழுவினா்.
நீலகிரி
குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவை தமிழ்நாடு பேரிடா் மீட்புக் குழுவினா் சீா்செய்தனா்
குன்னூா் அருகே இந்திரா நகா் புதுகாலனி குடியிருப்புப் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக ஏற்பட்ட மண் சரிவை தமிழ்நாடு பேரிடா் மீட்புக் குழுவினா் சீா்செய்தனா்.
உதகை: குன்னூா் அருகே இந்திரா நகா் புதுகாலனி குடியிருப்புப் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக ஏற்பட்ட மண் சரிவை தமிழ்நாடு பேரிடா் மீட்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை சீா்செய்தனா்.
நீலகிரி மாவட்டம் குன்னூா் மற்றும் கோத்தகிரி பகுதியில் கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குன்னூா் அருகே இந்திரா நகா், புது காலனியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட மண் சரிவால் அதன் கீழே உள்ள குடியிருப்புவாசிகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு மழைநீா் செல்வதற்கான கால்வாய்கள் மற்றும் மண் குவியல்களைக் கொண்டு தமிழ்நாடு பேரிடா் மீட்புக் குழுவினா் தற்காலிகமாக தடுப்புகளை அமைத்து சீா்செய்தனா்.

