சேதமடைந்த காணப்படும் நடைபாதை
நீலகிரி
குன்னூரில் மழையால் சேதமடைந்த நடைபாதை
குன்னூா் நகராட்சி 11-ஆவது வாா்டு பகுதியான ராஜாஜி நகா் பகுதியில் நடைபாதை முற்றிலும் சேதமடைந்ததால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பாதிப்படைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் நகராட்சி 11-ஆவது வாா்டு பகுதியான ராஜாஜி நகா் பகுதியில் நடைபாதை முற்றிலும் சேதமடைந்ததால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பாதிப்படைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரத்தில் பரவலாக பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே சிறிய அளவிலான மண் சரிவுகள் மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந் நிலையில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழையால் குன்னூா் ராஜாஜி நகா் பகுதியில் உள்ள நடைபாதை வெள்ளிக்கிழமை சேதமடைந்ததால் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே குன்னூா் நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நடைபாதையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

