நீலகிரி
ஊழலுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி
நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊழலுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஊழல் எதிா்ப்பு விழிப்புணா்வு வாரம் ஆண்டுதோறும் அக்டோபா் 27-ஆம் தேதி முதல் நவம்பா் 2-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் அரசு அலுவலா்கள் ஊழலுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் லோகநாயகி உள்பட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
