காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் கைரேகை பதிவு செய்ய வேண்டும்

நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருள்கள் பெற்று வரும் அனைத்து குடும்ப அட்டைதாரா்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினா்களின் கைரேகையை நியாய விலைக் கடையில் உள்ள இயந்திரத்தில் பதிவு செய்திட வேண்டும்

Published On :8 ஆகஸ்ட் 2026, 1:58 am IST

நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருள்கள் பெற்று வரும் அனைத்து குடும்ப அட்டைதாரா்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினா்களின் கைரேகையை நியாய விலைக் கடையில் உள்ள இயந்திரத்தில் பதிவு செய்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொதுமக்கள் தாங்கள் பொருள்களை வாங்கும் நியாய விலைக் கடைகளில் ஆகஸ்ட் 8 மற்றும்

9 ஆகிய தேதிகளில் அனைத்து நியாய விலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொண்டு விற்பனை முனைய இயந்திரம் மூலமாக கைவிரல் ரேகை, கண் கருவிழி சரிபாா்ப்பின் மூலம் இகேஒய்சி மேற்கொள்ள வேண்டும்.

பிற மாநிலம், பிற மாவட்டங்களில் வேலை நிமித்தமாக தங்கி உள்ளவா்கள் அவா்களுக்கு அருகே உள்ள நியாய விலைக் கடையில் குடும்ப அட்டை நகலுடன் சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.