Enable Javscript for better performance
மதுப் பிரியர்களால் பெண்கள் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மதுப் பிரியர்களால் பெண்கள் பாதிப்பு

    By வெள்ளக்கோவில்  |   Published on : 23rd August 2013 04:41 AM  |   அ+அ அ-   |    |  

    வெள்ளக்கோவில் இரட்டைக்கிணறு டாஸ்மாக் கடை அருகே மது அருந்துபவர்களால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    நகருக்கு அருகில் முத்தூர் சாலையிலும், காங்கயம் தேசிய நெடுஞ்சாலை அருகிலும் 7 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றில் இரட்டைக்கிணறு அருகிலுள்ள கடையில் பார் வசதி இல்லை. இதனால், இக் கடைக்கு அருகிலுள்ள காடு, வீட்டுமனைப் பகுதி, நூற்பாலை, கோவில் மற்றும் சாலையோரங்களில் கும்பலாக அமர்ந்து மதுகுடிக்கின்றனர்.

    இதனால், பெண்களுக்கு தொந்தரவாக இருப்பதுடன் திருட்டுப் பயமும் ஏற்படுகிறது. காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai