Enable Javscript for better performance
மதமாற்றத்தை மக்கள் சக்தியால் தான் தடுத்து நிறுத்த முடியும் என்று, இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் இராம.கோபாலன் பேசினார் .- Dinamani

சுடச்சுட

    

    மதமாற்றத்தை மக்கள் சக்தியால் தான் தடுத்து நிறுத்த முடியும் என்று, இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் இராம.கோபாலன் பேசினார் .

    By அவிநாசி  |   Published on : 17th June 2013 05:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதமாற்றத்தை மக்கள் சக்தியால் தான் தடுத்து நிறுத்த முடியும் என்று, இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் இராம.கோபாலன் பேசினார் .

        விவேகானந்தரின் 150-ஆவது ஜெயந்தியையொட்டி, இந்து முன்னணி சார்பில் அவிநாசி மேற்கு ரத வீதியில் மதமாற்றத் தடுப்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

        மாநில பொதுச் செயலாளர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாவட்டச் செயலர் வி.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநிலத் தலைவர் த.அரசு ராஜா, மாநில அமைப்பாளர் நா.முருகானந்தம், கோவை கோட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.எஸ்.கிஷோர் குமார், பொதுச் செயலாளர் ஜி.வெங்கடேஷ்வரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.விஜயகுமார், நகரச் செயலாளர் ஏ.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கலந்துகொண்டு இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் இராம.கோபாலன் பேசியது:     வாக்குக்காக, மதமாற்றத்தை அரசு தடுக்காது; மக்கள் சக்தியால் மட்டும்தான் தடுத்து நிறுத்த முடியும். ஒவ்வொரு வீடுகளிலும், தெருக்களிலும் மதமாற்றம் செய்ய வருபவர்களை தடுக்க வேண்டும். மதமாற்றத்துக்கு முக்கியக் காரணமான தீண்டாமையை வேரோடு அழிக்க வேண்டும். தீண்டாமை ஒரு பாவச் செயல்.      மதமாற்றத்தைத் தடுக்க வேண்டுமானால் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை, வார வழிபாடு, குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். பிரிந்து கிடக்கும் சாதி, சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்றார்.

       அவிநாசியில் பட்டத்தரசியம்மன் கோவிலை அகற்றும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். அவிநாசி அத்திக்கடவுத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai