உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியில், உலக மது ஒழிப்பு நாள் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, உடுமலை மத்தியப் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் உலக மது ஒழிப்பு நாள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கல்லூரி தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தினர். மதுவால் ஏற்படும் தீமைகள், உடல் நலக் கேடுகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொது மக்களிடம் மாணவ, மாணவிகள் வழங்கினர். உடுமலை காவல் துறை துணை ஆய்வாளர் மோகனராசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.