தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம், சேவூரில் புதன்கிழமை நடைபெற்றது .
தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் சார்பில் நடைபெற்ற இம் முகாமில் மகளிர் குழுக்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய்ப் புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், இந் நோய்க்கான அறிகுறிகள், சுய பரிசோதனை, நோய்த் தடுப்பு முறை, பாதிக்கப்பட்டோர் கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ வழிமுறைகள் ஆகியவை மகளிர் சுய உதவிக்குழு பயிற்றுநர்களால் அறிவுறுத்தப்பட்டது. இதற்கான பரிசோதனைகளும், உயர் சிகிச்சைகளும் மகளிர் திட்டம் மூலமாக அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பயிற்றுநர்கள் தெரிவித்தனர்.