ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து, உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டிஒய்எஃப்ஐ சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் அமைப்பாளர் அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ் முன்னிலை வகித்தார். பொது மக்களை கடுமையாகப் பாதிக்கக் கூடிய ரயில் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் யோகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல, மடத்துக்குளத்தில் வியாழக்கிழமை மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் டிஒய்எஃப்ஐ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.