Enable Javscript for better performance
அதிமுகவை ஆதரித்து நடிகர் பொன்னம்பலம் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் பகுதியில் நடிகர் பொன்னம்பலம் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

    ÷பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து மடத்துக்குளத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் நடிகர் பொன்னம்பலம் பேசியது: அகில இந்திய அளவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற  சிறப்பான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வரின் சிந்தனையில் உதித்த திட்டங்கள் அனைத்தும் தொலைநோக்கு பார்வையுடன் தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றார். கணியூர், காரத்தொழுவு, வேடபட்டி, கழுகரை, கணேசபுரம், கிருஷ்ணாபுரம், கண்ணாடிப்புத்தூர், நீலம்பூர், சாமராயபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இப் பிரசாரம் நடைபெற்றது.  மடத்துக்குளம் எம்எல்ஏ சி.சண்முகவேலு, மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் நா.அண்ணாத்துரை, வழக்குரைஞர் கே.ராமகிருஷ்ணன், இளைஞர் பாசறை மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.காளீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai