Enable Javscript for better performance
உடுமலை அரசு கலைக் கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டுக்குழு வருகை- Dinamani

சுடச்சுட

    

    உடுமலை அரசு கலைக் கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டுக்குழு வருகை

    Published on : 27th March 2014 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை (மார்ச் 27) தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

      இது குறித்து கல்லூரி முதல்வர் சோ.அன்பழகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

    கல்லூரியின் தரத்தை மதிப்பீடு செய்வதற்காக 3 பேர் கொண்ட தேசிய தர மதிப் பீட்டுக் குழு வியாழக்கிழமை வருகை தர உள்ளது. மார்ச் 27 முதல் 29 ந்தேதி வரை இக்குழுவினர் கல்லூரியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

    ÷கல்லூரி முதல்வர் அலுவலகம், துறை அலுவலகங்கள், கணினி மையங்கள், வேலை வாய்ப்புத்துறை செயல்பாடுகள், நுண்கலை மன்றம் உள்ளிட்டவை குறித்தும், பாடத்திட்ட வரையறைகள், விரிவாக்கத் திட்டப் பணிகள், உள் கட்டமைப்பு வசதிகள், கற்றல், கற்பித்தலுக்கான வாய்ப்புகள், மாணவர்கள் மேம்பாடு மற்றும் வளர்ச்சி நிலைக ள், அலுவலக நிர்வாகம், தலைமைத் தன்மை, புதுமை முயற்சிகள், சிறப்பு செயல்பாடு கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai