Enable Javscript for better performance
கம்யூனிஸ்ட்களுக்கு கொள்கைதான் முக்கியம்: கே.தங்கவேல் எம்எல்ஏ பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    கம்யூனிஸ்ட்களுக்கு கொள்கைதான் முக்கியம்: கே.தங்கவேல் எம்எல்ஏ பேச்சு

    Published on : 27th March 2014 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதியை விட கொள்கைதான் முக்கியம் என்று திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.தங்கவேல் பேசினார்.

      திருப்பூர் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே.சுப்பராயன் போட்டியிடுகிறார். இதற்கான தேர்தல் பணிமனை திருப்பூர் மங்கலம் சாலை கே.ஆர்.சி.மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான சட்டப் பேரவை உறுப்பினர் கே.தங்கவேல் திறந்து வைத்தார். இதில், தொகுதி தலைமைத் தேர்தல் பணிக்குழு அமைப்புக் கூட்டம் மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

     இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான சட்டப் பேரவை உறுப்பினர் கே.தங்கவேல் பேசியது:

      சில சீட்டுகளுக்காக போயஸ் தோட்டத்து கதவுக்கு அருகில் காத்துக் கிடந்தவர்கள் என்று கம்யூனிஸ்ட்டுகளை விமர்சித்தனர். ஆனால் கதவு திறந்திருக்கிறது என்று கருணாநிதி அறிவித்தபோதும் நாங்கள் போகவில்லை. தொகுதி அல்ல பிரச்னை  கொள்கை தான் முக்கியம். பதவியில் இல்லாமலே மக்களுக்கு நல்லது செய்து வருபவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்றார்.

    ÷இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன் பேசியது:

     வெற்றி பெற மட்டுமே பிறந்தவர்கள் போன்ற பிரமையை முதலாளித்துவ கட்சிகளும், ஊடகங்களும் ஏற்படுத்துகின்றன. முதல்வர் ஜெயலலிதா கூட பர்கூர் தொகுதியில் தோல்வி அடைந்தவர்தான். எனவே அந்த பிரமையை தகர்த்து எங்கெங்கு மக்கள் கூடுகிறார்களோ அங்கெல்லாம் மக்களின் முகம் பார்த்துப் பேசி இடதுசாரிக் கட்சியினர் வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார்.

     வேட்பாளர் கே.சுப்பராயன் பேசியது: காங்கிரஸ், பாஜக இருகட்சிகளும் மக்களை ஏமாற்ற நாடகமாடுகின்றன. தற்போது இந்திய ஜனநாயகத்தின் மரபுகள் சிதைக்கப்படுகின்றன. இதை கம்யூனிஸ்ட்கள் எதிர்க்கின்றன.

     காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு குதிரைகளுக்குமே பெரு முதலாளிகள் பணம் கட்டுகிறார்கள். எது ஓடும் குதிரை என்று பார்த்து அவர்களுக்கு ஆதரவாக முதலாளிகள் செயல்படுவார்கள் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai