Enable Javscript for better performance
கோடை வெப்பத்தால் கறிக்கோழி விற்பனை சரிவு- Dinamani

சுடச்சுட

    

    கடும் கோடை வெப்பம் மற்றும் பள்ளிகளில் இறுதித்தேர்வுகள் ஆகியவற்றால் கோழி இறைச்சி நுகர்வு குறைந்துள்ளதாக கறிக்கோழி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    ÷பல்லடம் பகுதியில் ஏராளமான கறிக்கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு தினசரி 6 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்திற்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. கறிக்கோழி பண்ணைக் கொள்முதல் விலையை உற்பத்தியாளர்கள் தினசரி நிர்ணயித்து அறிவிக்கின்றனர்.

    ÷இந்த மாதத் தொடக்கத்தில் பண்ணை விலை உயிருடன் கோழி கிலோ ரூ. 67 ஆகவும், சில்லரை விலை உயிருடன் கிலோ ரூ. 89 ஆகவும், தோலுடன் கறி ரூ. 125 ஆகவும், தோல் உரித்தது  ரூ. 134 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், 24-ஆம் தேதி, பண்ணை விலை உயிருடன் கிலோ ரூ. 58 ஆகவும், சில்லரை விலை உயிருடன் கிலோ ரூ. 80 ஆகவும், தோலுடன் கறி ரூ. 112 ஆகவும், தோல் உரித்தது ரூ. 120 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. பண்ணைக் கொள்முதல் விலை குறைவதால் உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    ÷இது குறித்து கறிக்கோழிபண்ணை உற்பத்தியாளர் ஒருவர் கூறியது:

    ஒரு கிலோ கறிக்கோழி உயிருடன் உற்பத்தி செய்ய  ரூ. 70 வரை செலவாகிறது. தற்போது, ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ. 58-க்கு விற்பதால் கிலோவுக்கு ரூ. 10 நஷ்டம் ஏற்படுகிறது. ஈஸ்டர் நோன்பு காரணமாக நுகர்வு குறைவு என்பது வழக்கமானது.

    ÷இப்போது நிலவும் கடும் கோடை வெப்பம் மற்றும் பள்ளிகளில் இறுதித் தேர்வு ஆகியவற்றால் கோழி இறைச்சி நுகர்வு மேலும் குறைந்துள்ளது. மேலும், இந்த ஆண்டு கேரளத்துக்கு கறிக்கோழி விற்பனைக்கு செல்வது 60 சதவீதம் குறைந்ததும் கறிக்கோழி விலை வீழ்ச்சிக்கு காரணம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai