Enable Javscript for better performance
தமிழக புறக்கணிப்புக்கு துணைபோனவர் கருணாநிதி: எம்.எஸ்.எம்.ஆனந்தன்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக புறக்கணிப்புக்கு துணைபோனவர் கருணாநிதி: எம்.எஸ்.எம்.ஆனந்தன்

    Published on : 27th March 2014 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸின் தமிழக புறக்கணிப்புக்கு துணைபோனவர் கருணாநிதி என்று வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.

     திருப்பூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.சத்யபாமாவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் திருப்பூர் காங்கயம் சாலை, புஷ்பா திரையரங்கு சந்திப்பு பகுதி, எம்.எஸ்.நகர் உள்பட 14 இடங்களில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மாநில மகளிர் அணிச் செயலாளர் சசிகலாபுஷ்பா, மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன் உள்ளிட்ட அதிமுகவினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

      இதில், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியது:

    காவிரிப் பிரச்னையில் மத்திய காங்கிரஸ் அரசு எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை. காங்கிரஸ் அரசுடன் 17 ஆண்டு காலம் இருந்தவர் கருணாநிதி. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் தமிழக புறக்கணிப்புக்கு துணைபோனவர் கருணாநிதி.

     தமிழக முதல்வர் ஜெயலலிதா, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து காவிரி நதிநீர் கொண்டுவர செய்தார். அந்த அரசாணையை கூட மத்திய அரசாங்கம் அரசிதழில் வெளியிட மறுத்தது. அதற்காகவும் போராடி வெற்றிகண்டார் முதல்வர்.

     இலங்கை தமிழர் பிரச்னையில் அங்குள்ள லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட போது நாடகம் நடத்தியவர் தான் கருணாநிதி. காங்கிரஸ் அரசு தமிழர்களை புறக்கணித்துக் கொண்டிருக்கிறது. எனவே மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

      அதிமுக மாநில மகளிரணி செயலாளர் சசிகலாபுஷ்பா பேசியது:

    பெண்களின் வாழ்க்கை பெருமைக்குரியதாக அமைய வேண்டும் என்பதற்காக விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை இல்லந்தோறும் வழங்கியவர் தமிழக முதல்வர். தாலிக்கு தங்கம், மகப்பேறு நிதியுதவி என பல்வேறு திட்டங்களை பெண்களுக்காக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். முதல்வருக்கு மக்கள் ஆதரவு அளிக்கும் வகையில் அதிமுக வேட்பாளர் வி.சத்யபாமாவை வெற்றிபெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

      இதில் மண்டலத் தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், மாணவரவணிச் செயலாளர் அன்பகம் திருப்பதி, தொழிற்சங்கச் செயலாளர் கண்ணப்பன் உள்பட அதிமுகவினர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai