Enable Javscript for better performance
பல்லடத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோவை மக்களவைத் தொகுதி, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் பல்லடம் பகுதி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    தேர்தல் பணிமனையை கோவை தொகுதி திமுக பொறுப்பாளர் ப.மு.முபாரக் திறந்து வைத்தார். கூட்டத்திற்கு, திருப்பூர் மாவட்டச் செயலாளர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் என்.சோமசுந்தரம், ஒன்றியச் செயலாளர் எஸ்.ராஜசேகரன், நகரச் செயலாளர் விமல் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இளைஞரணி அமைப்பாளர் மு.சண்முகசுந்தரம் வரவேற்றார். கூட்டத்தில் திமுக வேட்பாளர் கி.கணேஷ்குமார் பேசினார் (படம்).

    கூட்டத்தில், உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் கு.செல்லமுத்து பேசியது: கடந்த திமுக ஆட்சி காலத்தில் செய்த திட்டங்களை நினைவுபடுத்தி ஓட்டு கேட்டால் போதும் வெற்றி உறுதி. கருணாநிதி சொல்லும் நபரே பாரத பிரதமராக முடியும் இதனை இத் தேர்தலிலும் நிருபிக்க வேண்டும் என்றார்.

     நகர நிர்வாகிகள் ஏ.ரத்தினசாமி, அபிபுல்லா, கே.ஏ.பழனிசாமி, செம்மிபாளையம் ஊராட்சித் தலைவர் கே.என்.திருமூர்த்தி உள்பட ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai