Enable Javscript for better performance
மோடி அலையும், என்னுடைய மக்கள் சேவையும் வெற்றியை தேடித் தரும்: சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    மோடி அலையும், என்னுடைய மக்கள் சேவையும் வெற்றியை தேடித் தரும்: சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

    Published on : 27th March 2014 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாடு முழுவதும் வீசும் நரேந்திரமோடி அலையும், என்னுடைய மக்கள் சேவையும் வெற்றியை தேடித் தரும் என்று கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், பொங்கலூர் ஒன்றியத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை புதன்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியது:

      மத்தியில் நரேந்திரமோடி தலைமையில் நல்லாட்சி மலர வேண்டும் என்று பாரதம் முழுவதும் அலை வீசுகிறது. கோவை மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக நான் பணியாற்றிய போது பொதுமக்களுக்கு எண்ணற்ற சேவைகளை செய்து உள்ளேன். அதனை மக்கள் மறந்து இருக்கமாட்டார்கள். இந்த இரண்டும் எனக்கு வெற்றியை தேடித் தரும் என்றார். இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மதிமுக நிர்வாகிகள் கள்ளிப்பாளையம் மணி, பொங்கலூர் பாலு, ஒன்றிய பாஜக தலைவர் அசோக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai