Enable Javscript for better performance
வி.சி.க. செயல்வீரர்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் அவிநாசியில் புதன்கிழமை நடைபெற்றது.

    அவிநாசி, சூளைப் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மாவட்டத் துணைச் செயலாளர் ப.வெ.செல்வராஜ் தலைமை வகித்தார். தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்டச் செயலாளர் ரா.நாதன், ஒன்றியச் செயலாளர் ர.கருப்புசாமி, அன்னூர் ஒன்றியச் செயலாளர் ப.பாலு மகேந்திரன், கொள்கை பரப்புச் செயலாளர் ப.ராசு வளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நீலகிரி தொகுதி தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர் ஜோ.இலக்கியன் சிறப்புரையாற்றினார்.

    ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.ராசவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்வது,  தனிக்குழு அமைத்து சிதம்பரம், திருவள்ளூர் ஆகிய தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நகரச் செயலாளர் கருப்புசாமி, பொறுப்பாளர்கள் ஜெயப்பிரகாஷ், ரகீம், ஆறுமுகம், ரங்கசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai