Enable Javscript for better performance
அமராவதி அணையில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அமராவதி அணையில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

    By தாராபுரம்  |   Published on : 17th April 2015 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடிநீர் மற்றும் விவசாயப் பயன்பாட்டிற்கு அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி தலைமை வகித்தார். வட்டாட்சியர் க.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

    இதில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.காளிமுத்து பேசியது: தாராபுரம் நகராட்சி தினசரி காய்கறிச் சந்தையில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவரும் விளைபொருள்களை இருப்பு வைத்து விற்க தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டு விவசாயிகள் பயன்பாட்டிற்கு வழங்கவேண்டும்.

    உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்டச் செயலர் ஆர்.ஈஸ்வரமூர்த்தி: அமராவதி அணையில் தற்போது 30 அடி தண்ணீர் உள்ள நிலையில் உடனடியாக குடிநீர் மற்றும் அமராவதி பழைய, புதிய பாசனப் பகுதிகளில் விவசாயப் பணிகள் மேற்கொள்ள தண்ணீர் திறக்கவேண்டும். இதன்மூலமாகக் கருகும் நிலையில் உள்ள பயிர்கள் பாதுகாக்கப்படும் என்றார். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்துப் பேசிய கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி, கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அடுத்த கூட்டத்தில் அதுகுறித்து பதிலளிக்கப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai