Enable Javscript for better performance
\\\"இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் பட்டுநூல் ஆடைகளுக்கு வரவேற்பு\\\'- Dinamani

சுடச்சுட

    

    "இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் பட்டுநூல் ஆடைகளுக்கு வரவேற்பு'

    By திருப்பூர்  |   Published on : 17th April 2015 05:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் பட்டுநூல் ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக மத்திய ஜவுளிக்குழு முன்னாள் இயக்குநர் ஜி.எஸ்.நாடிகர் தெரிவித்தார்.

     நிஃப்ட்-டீ பின்னலாடை பேஷன் கல்லூரி சார்பில் பட்டுநூல் இழை மூலமாகப் பின்னலாடை தயாரிப்பது குறித்த பயிற்சி வகுப்பு திருப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

     இந்நிகழ்ச்சிக்கு, நிஃப்ட்-டீ கல்லூரி முதன்மை ஆலோசகர் ராஜா சண்முகம் தலைமை வகித்தார். கல்லூரித் தலைவர் முருகானந்தன் வரவேற்றார். மத்திய பட்டு வாரிய உதவி இயக்குநர் சங்கர் கொட்ரனவர் மல்பரி மற்றும் மல்பரி வகை அல்லாத நூல் இழைகள் மூலமாகப் பின்னலாடைகள் தயாரிப்பது குறித்து விளக்கமளித்தார். மத்திய பட்டுத் தொழில்நுட்ப ஆய்வக அறிவியலாளர் ஹிப்ராகி, பேஷன் தொழில்நுட்பப் பேராசிரியர் சரவணகுமார் ஆகியோர் பட்டுநூல் இழை மூலமாகப் பின்னலாடை தயாரிப்பில் உள்ள தொழில்நுட்ப நுணுக்கங்கள் குறித்து விளக்கமளித்தனர். இதில், மத்திய ஜவுளிக்குழு முன்னாள் இயக்குநரும், ஆலோசனைக் கமிட்டி  உறுப்பினருமான ஜி.எஸ்.நாடிகர் பேசியது:

     பருத்தி நூல் பின்னலாடை தயாரிக்கும் முறையில் இருந்து, பட்டுநூல் இழை பின்னலாடை தயாரிப்பிற்கு மாறும் மன நிலையை உருவாக்கிக் கொள்வதில் ஆரம்பத்தில் சில பிரச்னைகள் இருக்கும். ஆனாலும், பட்டுநூல் இழையில் பின்னலாடை தயாரிப்பிற்கு மாறுவது இன்றைய சந்தை வாய்ப்பை பயன்படுத்தி வெற்றிகொள்ள உதவும்.

     இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் பட்டுநூல் ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதை திருப்பூர் வர்த்தகர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். திருப்பூர் நிஃப்ட்-டீ கல்லூரி வளாகத்தில் பட்டுநூல் இழை மூலமாகப் பின்னலாடை தயாரிக்கும் ஆய்வுக் கூடத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன.

     மேலும், என்ன உதவிகள் தேவையோ அதை வழங்க மத்திய பட்டு வாரியம் தயாராக உள்ளது. எரி, மூசா, மல்பரி, டஸார் வகை பட்டுப் பூச்சிக் கூடுகள் மூலமாக நூல் இழைகள் தயாரிக்கப்பட்டு, அதன் மூலமாகப் பின்னலாடைகள் உருவாக்கும் முறைகளைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டவேண்டும் என்றார்.

    நிஃப்ட்-டீ கல்லூரித் துணை முதல்வர் சிவஞானம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai