Enable Javscript for better performance
கிராமங்களில் கழிப்பிடம் இல்லாத வீடுகள் கணக்கெடுப்பு- Dinamani

சுடச்சுட

    

    கிராமங்களில் கழிப்பிடம் இல்லாத வீடுகள் கணக்கெடுப்பு

    By பல்லடம்  |   Published on : 17th April 2015 05:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்லடம் பகுதி கிராமங்களில் கழிப்பிடம் இல்லாத வீடுகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை ஒழிக்க, மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. வீடுகளில் கழிப்பிடம் கட்ட அரசு மானியம் வழங்கியும் பலர் கழிப்பிடம் கட்டாமல் உள்ளனர். இத்திட்டத்தை முழுமைப்படுத்த, ஊராட்சிப் பகுதிகளில், கழிப்பிடம் இல்லாத வீடுகளைக் கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, பல்லடம், பொங்கலூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிப் பகுதிகளில் கணக்கெடுக்கும் பணியில் வட்டார அளவிலான கூட்டமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கணக்கெடுப்பு விவரத்தை ஒன்றியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கவுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai