Enable Javscript for better performance
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் சத்துணவு ஊழியர்களின் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

     திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ரீட்டா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் சந்திரன் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி வைத்தார். மாநில துணைத் தலைவர் முருகேசன், மாவட்டச் செயலாளர் அம்சராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     இதில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1,274 சத்துணவு மையங்களிலிருந்தும் அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

     தொடர்ந்து, திருப்பூர் பழைய பேருந்து நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai