Enable Javscript for better performance
சாயக் கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகளில் தாமதம் கூடாது- Dinamani

சுடச்சுட

    

    சாயக் கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகளில் தாமதம் கூடாது

    By திருப்பூர்  |   Published on : 17th April 2015 05:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளை தாமதம் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும் என சாயப்பட்டறை உரிமையாளர்களிடம் கைத்தறித் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா அறிவுறுத்தினார்.

     தமிழக அரசு திருப்பூர் சாயப்பட்டறைகளின் சாயக் கழிவுநீர் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக ரூ. 200 கோடியை வட்டியில்லா கடனாக வழங்கியிருந்தது. அதில் பல்வேறு தொழில்நுட்ப அமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

     இப்பணி நடைபெறும் திருப்பூர், பல்லடம் சாலையில் இயங்கி வரும் அருள்புரம் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை கைத்தறித் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கைத்தறித் துணிநூல் துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர்சிங், ஆட்சியர் கு.கோவிந்தராஜ் ஆகியோர் வியாழக்கிழமை பார்வையிட்டனர்.

     அப்போது, திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நாகராஜ், அருள்புரம் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய நிர்வாக இயக்குநர் செல்வகுமார் ஆகியோர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படும் முறை குறித்து விளக்கமளித்தனர்.

     அருள்புரம் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ. 10.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

      தற்போது ரூ. 6.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள ரூ. 4 கோடியைப் பெற நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்ய அருள்புரம் சாயப்பட்டறையாளர்கள் தயாராக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

     இதுகுறித்து, கைத்தறித் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா கூறுகையில்,

    "தாமதம் இல்லாமல் சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகளை நிறைவு செய்யுங்கள். தமிழக அரசின் உதவியைச் சரியாகப் பயன்படுத்தி, பூஜ்ய சதவீத கழிவுநீர் சுத்திகரிப்பு பணியை மேற்கொள்ளுங்கள்" என அறிவுறுத்தினார்.

     இந்த ஆய்வில், திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் முருகசாமி, அங்கேரிபாளையம் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத் தலைவர் வேல் ஜெயகுமார், திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் சு.குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai