Enable Javscript for better performance
தரைப்பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம்- Dinamani

சுடச்சுட

    

    தரைப்பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம்

    By சத்தியமங்கலம்  |   Published on : 17th April 2015 04:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தாளவாடி வனப்பகுதியில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்றதால், பீம்ராஜ்நகர்-சூசைபுரம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடியை அடுத்துள்ள தொட்டஹாசனூர், சூசைபுரம், மல்லன்குழி, மெட்டல்வாடி,பாரதிபுரம், ஓசூர், பீம்ராஜ்புரம் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை மாலை 4 முதல் 6 மணி வரை கனமழை பெய்தது. இதனால் வன ஓடைகளில் பெருக்கெடுத்த மழைநீர், அங்குள்ள பள்ளத்தில் கலந்ததால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இதனால் உருவான காட்டாற்று வெள்ளம் பீம்ராஜ்நகர்- சூசைபுரம் தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி சென்றது. இதனால் அப் பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பள்ளத்தில் முட்செடிகள் மற்றும் மரக்கிளைகள் அடித்து செல்லப்பட்டதால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பெரும்பாலான வனச் சாலைகளில் தண்ணீர் தேங்கி

    நிற்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai