Enable Javscript for better performance
நாம் தமிழர் கட்சியினர் திருப்பூரில் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாம் தமிழர் கட்சியினர் திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

    By திருப்பூர்  |   Published on : 17th April 2015 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திர மாநிலத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் நாம் தமிழர் கட்சி, வீரத்தமிழர் முன்னணியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

     ஆர்ப்பாட்டத்திற்கு வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழன் வடிவேல் தலைமை வகித்தார். நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை அமைப்பாளர் தினேஷ் பால்ராஜ் முன்னிலை வகித்தார்.

     நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பேச்சாளர் குமுதவல்லி, மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் மஞ்சு, செல்வராஜ், செல்வரத்தினம், துணைத் தலைவர் சிவகுமார், பொருளாளர் பரமசிவம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

     இதில், சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் ஆந்திர அரசு நிவாரணநிதி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.

    துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai