Enable Javscript for better performance
பச்சாபாளையம் மயானத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பச்சாபாளையம் மயானத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

    By பல்லடம்  |   Published on : 17th April 2015 05:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பச்சாபாளையம் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பல்லடம் நகராட்சி, பச்சாபாளையம், கச்சேரிப் பள்ளம் ஓடைக்கு அருகில் மயானம் உள்ளது. இம்மயானத்திற்கு, சுற்றுச்சுவர் இல்லாததால் அங்கு சமூக விரோதச் செயல்கள் நடைபெற்று வருகின்றன.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: மயானத்தில் மது அருந்த வருவோர் போட்டுவிட்டு செல்லும் காலி பாட்டில்களால் இறுதிச் சடங்கிற்கு வருவோர் பாதிக்கப்படுகின்றனர். மேலும், அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை மயானத்தில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai