Enable Javscript for better performance
பல்லடம் உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்காவில் அமைச்சர்கள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    பல்லடம் உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்காவில் அமைச்சர்கள் ஆய்வு

    By பல்லடம்  |   Published on : 17th April 2015 05:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்லடம் உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்காவில் அமைச்சர்கள் கோகுல இந்திரா, எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

    பல்லடத்தில் ரூ. 55.74 கோடி மதிப்பில், உலகத் தரத்துடன் கூடிய உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்கா 65 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 400 நவீன தறிகள் மூலமாக ஆண்டுக்கு ரூ. 500 கோடி மதிப்பில் உயர் தரமான ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    இதன்மூலமாக நேரடியாக 3 ஆயிரம் பேரும், மறைமுகமாக

    10 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இப்பூங்காவில் ஜவுளி உற்பத்தி செய்யப்படுவதை கைத்தறி துறை அமைச்சர் கோகுல இந்திரா, வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ், பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பரமசிவம், மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.சண்முகம், திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் எஸ்.குணசேகரன், மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் நடராஜன், உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்கா தலைவர் பி.கே.செந்தில்குமார், இயக்குநர்கள் வேலுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து, அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையத்திலும் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai