Enable Javscript for better performance
மருத்துவர் மீது வன்கொடுமை வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளக்கோவிலில் மருத்துவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     வெள்ளக்கோவிலைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (50). கண் மருத்துவர். இவரது மருத்துவமனை காங்கயம் சாலை, பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது.

     மருத்துவமனைக்கு சின்னமுத்தூர், நேதாஜி வீதியைச் சேர்ந்த சந்திரன் (40) கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்துள்ளார். கண்ணில் மருந்து விடப்பட்டு, வீட்டுக்குத் திரும்பிய நிலையில் எரிச்சல் அதிகரித்து மறுநாள் மீண்டும் சந்திரன் சிகிச்சைக்கு வந்துள்ளார். அப்போது மருத்துவர் ரவீந்திரனுக்கும், சந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

     அப்போது மருந்துவர் ரவீந்திரன், சந்திரனை ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதுடன், மிரட்டலும் விடுத்தாராம். இதுகுறித்து சந்திரன் அளித்த புகாரின் பேரில் மருத்துவர் ரவீந்திரன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளக்கோவில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai